அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!
பிரதேச செயலகங்கள் ஊடாக பிறப்புஇ இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் காணி பதிவு சேவைகள் எதிர்வரும் 10 நாட்களுக்கு திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் காலை 8.30 முதல் பிற்பகல் 4.00 வரை இந்த சேவைகள் இடம்பெறவுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பதிவாளர் திணைக்களத்தின் பத்தரமுல்லை சுஹுருபாய வளாகத்தில் அமைந்துள்ள கிளை அலுவலகம் மற்றும் குருணாகலை, கண்டி, மாத்தறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கிளை அலுவலகங்கள் உரித்தான பிரதேச செயலகங்களின் மாவட்ட பதிவாளர் பிரிவு வாரத்தின் 5 நாட்களுக்கு வழமை போல இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அனைத்து வாரங்களிலும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் தபால் மற்றும் உப தபால் நிலையங்களை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றாடல் தினம் - 2022
உலக சூழல் தினம் - 2022 இனை முன்னிட்டு 'பூலோகம் ஒரே ஒரு குடிமனை'என்கின்ற தொனிப்பொருளில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றாடல் தின நிகழ்வுகள் இன்றைய தினம் (05.06.2022) பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் மிகவும் எளிய முறையில் இடம்பெற்றது. மக்களிடையே உணவுப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்வதற்காக பிரதேச செயலக பிரிவின் 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் 225 விழிப்புணர்வு வீட்டுத் தோட்டங்களானது கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களின் பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் முகமாக மகிழூர் டுழுர் பாலர் பாடசாலை மாணவர்களால் வீட்டுத் தோட்டம் அமைக்கும் ஆரம்ப மற்றும் பிரதான நிகழ்வானது டுழுர் கட்டிட வளாகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அடுத்த நிகழ்வாக பிரதேச செயலக பசுமைக் கழக உறுப்பினர்களால் வருடாந்தம் வெளியிடப்படும் சுற்றாடல் செய்திமடல்- 2022 வெளியீட்டு நிகழ்வு மற்றும் உணவுப் பாதுகாப்புஇ சிக்கனம் தொடர்பில் 'உற்பத்தி செய்வோம் உலகை வெல்வோம்'துண்டுபிரசுர விநியோக நிகழ்வு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. அத்தோடு பிரதேச செயலக வளாகத்தில் உத்தியோகத்தர்களினால் பயிர்ச்செய்கை மேம்பாட்டுத் திட்டமானது ஆரம்பித்துவைக்கப்பட்டதுஇவ் நிகழ்வுகளில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், பசுமைக் கழக உறுப்பினர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமானது 29.03.2022 அன்று காலை 9.18 சுபநேரத்தில் நாடுபூராவும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவின் " பசுமையானதொரு தேசம் " ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் எருவில் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மு.ப 09.18 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கமத்தொழில் அமைச்சு உட்பட 8 அமைச்சுக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் மேற்படி தேசிய வேலைத்திட்டத்திற்காக களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிலிருந்து 4430 வீட்டுத்தோட்ட பயனாளிகள் இத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு , 70 சமூகமட்ட மாதிரி வீட்டுத்தோட்டங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் இணைப்பாளர் திரு தஜீவரன், மாவட்ட செயலக உள்ளக கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஷ், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் S.நிர்மல்ராஜ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார் , சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு K.உதயகுமார், மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் திரு S.தயாபரன், கருத்திட்ட முகாமையாளர் S.தமிழ்வாணி, சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள், ஆலய தலைவர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி பயனுகரிகள் எனப் பலரும் கலந்து கொண்டதோடு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான நாற்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.




மகளிர் தின விழா - 2022மகளிர் தின விழா - 2022
மண்முனை தென் எருவில் பற்று இ களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் 2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் தின விழா மகிழூர் கிழக்கு இ நாகபுரம்இ டுழுர் கட்டடத்தில் 08.03.2022 மாலை 2.15 மணியளவில் எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அம்மணி தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளுடன் பிரதேசத்தின் பொது மக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளிர் சங்கங்கள் , சமுர்த்தி சங்கங்கள் என பெருமளவான மக்கள் பங்குபற்றினர்.இதில் திருமதி அமிர்தகலாதேவி பாக்கியராசா(மேலதிக பணிப்பாளர் நாயகம்இ சமுர்த்தி திணைக்களம்) மற்றும் திருமதி. வைத்தியர் என். பிரசாந்தினி (ஆதார வைத்தியசாலைஇ களுவாஞ்சிகுடி) போன்றோருக்கு 'மாண்புறு மங்கை' விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.மேலும் இந்நிகழ்வில் தமிழ்தாய் வணக்கம்இ நடன நிகழ்வுகள்இ கவியரங்கம்இ பேச்சு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.
அத்துடன் எமது பிரதேசத்தில் திருமண பதிவு செய்யாமல் காணப்பட்ட 15 குடும்பங்களிற்கு திருமண பதிவு வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.






