மண்IMG 20181024 WA0010முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார விழாவானது 23.10.2018ம் திகதி செவ்வாய்கிழமை பி.ப 2.00 மணியளவில் களுதாவளை கலாசார மண்டபத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் ஆரம்பமாகியது.

இக் கலாசார விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரும் சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதனும் கௌரவ அதிதிகளாக வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய கலாநிதி கு.சுகுணன் மற்றும் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி ஞா.தில்லைநாதனும் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் களுதாவளை கல்லடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தேற்றாதீவு தேனுகா கலைக் கழகத்தின் தமிழ் கலாசார வாத்திய குழுவினர் அதிதிகளை வரவேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. இதன்போது தமிழ்தாய் வாழ்த்தினை திருவருள் நுன்கலை மன்றமும், கலாசார கீதத்தை தேனுகா கலைக்கழகத்தினாலும் இசைக்கப்பட்டதுடன் வரவேற்புரையை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் நிகழ்த்தியதுடன் வரவேற்பு நடனத்தினை பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்கள் நிகழ்த்தினர்.

இவ் விழாவின் தலைமை உரையை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் நிகழ்த்தி வைத்தார். கிராமிய இசையை களுதாவளை மகா வித்தியாலய மாணவிகளும் குறவன் குறத்தி நடனத்தினை களுதாவளை நிருத்திய கலா மன்ற மாணவியரும் ஆற்றுகைப் படுத்தினர். எழுவான் சிறப்பு மலரினை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் முதல் பிரதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமரிடம் கையளித்தார்.

இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மூத்த, இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மண்முனை தென் எருவில் பற்று கலாசாரப் பேரவையால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயம். 

 IMG 20181024 WA0002

 

IMG 20181024 WA0006

 

News & Events

News & Events

Scroll To Top