இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு 2021
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு 04.12.2021 அன்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு ஆன்மீக அதிதியாகவும் வளவாளராகவும் இராமகிருஸ்ண மிஸன் ஸ்ரீமத்சுவாமி தஷஜானந்தர் கலந்து கொண்டார்.
அத்துடன் வளவாளராக அம்பாறை மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பத்மகுமார் எழில்வாணி குமுதினி பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்;குட்பட்ட அறநெறிப் பாடசாலைகள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலைகள் ஆகியவற்றின் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.