சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் 'முன்மாதிரியான பெண் தலைமைத்துவ ' சர்வதேச விருதுக்கு தெரிவாகியுள்ளதனை முன்னிட்டு மகத்தான வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு 2022.02.21 அன்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
Women Icon சர்வதேச அமைப்பானது Times Womens உடன் இணைந்து வருடாந்தம் சர்வதேச ரீதியாக பல துறைகளின் கீழ் சாதனை பெண்மணிகளை தெரிவுசெய்து கெளரவித்தது வருகின்றது. அதனடிப்படையில் எமது பிரதேச செயலாளர் அவர்கள் 'முன்மாதிரியான பெண் தலைமைத்துவ ' சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் .
இந்த கெளரவிப்பு நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு த. நிமல்ராஜ் , கணக்காளர் திரு எஸ் விக்னராஜா , நிர்வாக உத்தியோகத்தர் திரு வி தவேந்திரன்,பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்து செய்திகளை தெரிவித்துக்கொண்டனர் .