களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில் 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியம் உரித்தற்ற மக்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க செய்யும் சமூக திட்டமhகும். இதற்காக 2019 ம் ஆண்டு தேசிய விருதினையும் 2020 ம் ஆண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தினையும் மற்றும் 2021 ம் ஆண்டு; தேசிய விருதினையும் பெற்றுள்ளது.
பொதுமக்களை சென்றடைய வழிகாட்டல்களும், இலக்குகள் நிர்ணயமும் சரியாக புரிந்து கொண்டு செயற்பட்ட உத்தியோகத்தர்களின் விடாமுயற்சியினாலும் தற்போதே மக்கள் அதன் பலனை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.உணர்ந்து பங்காற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களனாலேயே இத்தகைய தேசிய விருதுகள் சாத்தியமாகியுள்ளது. அவர்களுக்கு இவ் விருதுகளை சமர்ப்பிப்பதில் பிரதேச செயலகம் பெருமையடைகின்றது.