பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களின் பிரதி அல்லது பிரதிகளை பெறுவதற்கு
1.பிறப்பு, விவாகம் மற்றும் மரணச்சான்றிதழ்களின் பிரதி அல்லது பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பதாரர் தங்களை உறுதிப்படுத்துவதற்கு பிரதம வரவேற்பு கருமபீடத்தில் அடையாள அட்டையை சமர்ப்பித்து உரிய விண்ணப்பபடிவத்தை முழுமையாகப் பூரணப்படுத்தி தனது கையொப்பத்தை இடவேண்டும்.
2.முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை பதிவாளர் கிளையின் வரவேற்பு கருமபீடத்தில் ஒப்படைக்கும்போது,
- விண்ணப்பத்தில் பதிவு இலக்கம் அல்லது பதிவு செய்யப்பட்ட திகதி குறிப்பிடப்பட்டிருப்பின் ஒரு பிரதிக்கு காசுக்கட்டணம் ரூபா 100.00 செலுத்த வேண்டும்.
- விண்ணப்பத்தில் பதிவு இலக்கம் அல்லது பதிவு செய்யப்பட்ட திகதி குறிப்பிடப்படாதிருப்பின் பிரதிக்கு காசுக்கட்டணம் ரூபா 200.00 செலுத்த வேண்டும்.
- ஒரு பிரதிக்கு மேலதிகமாக பிரதிகள் பெற்றுக்கொள்வதற்கு ஒரு பிரதிக்கு ரூபா 100.00 செலுத்த வேண்டும்.
- விண்ணப்பம் மற்றும் காசுக்கட்டணம் ஒப்படைத்தமைக்காக உரிய உத்தியோகத்தரிடமிருந்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளவேண்டும்.
- சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கு தங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டை உரிய உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்து பிரதிகளையும் இரத்துச் செய்யப்பட்ட பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொள்ளவும்.
- பிறப்புச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
- பிறப்பு பதியப்பட்டிருந்தால், பிறப்புச் சான்றிதழின் பிரதி அனுப்பப்படுவதுடன் பிறப்பு பதியப்படாதிருந்தால் அது பற்றி தெரிவித்து கடிதம் அனுப்பப்படும்.
பிறப்பு பதிவு சான்றிதழை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ள இங்கே Click செய்யவும்
இறப்பு பதிவு சான்றிதழை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ள இங்கே Click செய்யவும்
திருமண பதிவு சான்றிதழை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ள இங்கே Click செய்யவும்
Updated Date :- 2020.12.04
பெறுமதிச் சான்றிதழை பெறுவதற்கு
- பெறுமதிச் சான்றிதழைக் கோரும் விண்ணப்பப்படிவம்
- கிராம அலுவலகர் விதந்துரைப்புடனான அறிக்கை
- பெறுமதி சான்றிதழை கோரும் சொத்து தொடர்பான சொத்துப்பத்திரம்
- திட்டப்படம்
- விண்ணப்பிக்கும் திகதிக்கு ஒரு மாத காலத்திற்கு உட்பட்ட புத்தக காகிதத் தாள்கள்
- சட்டத்தரணி ஒருவரால் அல்லது நொத்தாரிசு ஒருவரினால் வெளியிடப்பட்ட காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் உரித்துப் பத்திரம்
அத்தோடு விண்ணப்பத்தாரியின் சொத்து பெறுமதியின் 1.15% கணக்கிடப்பட்டு அத் தொகையை அவர் கணக்கு கிளையில் கட்டி பற்றுச்சீட்டு எடுத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ள இங்கே Click செய்யவும்
Updated Date :- 2020.12.04
வருமானச் சான்றிதழை பெறுவதற்கு
- வருமானச் சான்றிதழ் கோருபவரின் விண்ணப்ப கடிதம். இக் கடிதத்தில் அவரின் மாத வருமானம் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
- வருமான மதிப்பீட்டு அத்தாட்சிப்பத்திரம் வழங்குவதற்கு கிராம உத்தியோகத்தரின் அறிக்கை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்
- அவரின் வருட வருமானத்தில் 1.15% கணக்கிடப்பட்டு அத் தொகையை அவர் கணக்கு கிளையில் கட்டி பற்றுச்சீட்டு எடுத்தல் வேண்டும்.
- வருமானம் மதிப்பிடும் படிவத்திற்கு தேவையான சான்றிதழ் கோருபவரின் பெயர், முகவரி, ஆண்டு வருமானம், வருமானம் பெறும் வழி, சான்றிதழ் கோரும் காரணம், அறவிட்ட தொகை மற்றும் கணக்குகிளையில் பணம் கட்டப்பட்ட பற்றுச்சீட்டு போன்ற தகவல்கள் அனைத்தும் வழங்கப்படல் வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ள இங்கே Click செய்யவும்
Updated Date :- 2020.12.04



