💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச  குடியரசின் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க  அவர்களினால் வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும்  தொனிப்பொருளில்  ஆரம்பித்து வைக்கப்பட்ட" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் " நிகழ்வின்  மண்முனை  தென்  எருவில்பற்று  பிரதேச செயலக பிரிவின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர்  அவர்களின்  தலைமையில் இன்றைய தினம் (02.06.2026) மகிழுர்முனை  மண்டபத்தடி வலம்புரி ஆலயத்துக்கு அருகாமையில் இடம் பெற்றது.

💥 இலங்கையின் பல்பரிமாண வறுமையினை ஒழிக்கும் பொருட்டு  25000 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தை கொண்டு கிராமிய அபிவிருத்தி  திட்டங்களை செயற்படுத்தல் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. 

💥 இந்த  திட்டத்தின்  கீழ் மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலகத்துக்கு 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், மகிழூர்முனை  விவசாய வீதி 8.25 மில்லியன் ரூபா பெறுமதியில் கொங்கிறீட்  வீதியாக செப்பனிடப்படவுள்ளது.  

💥 மேலும் குருமண்வெளி 11 கிழக்கு,  களுதாவளை 04  சாந்திபுரம்  மற்றும்  தேற்றாத்தீவு  தெற்கு  கிராம  சேவகர்  பிரிவுகளை சேர்ந்த 03 வீதிகளும் இத்திட்டத்தின் கீழ் செப்பனிடப்படவுள்ளது.  

💥 இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச சபை தவிசாளர் கௌரவ மே. வினோராஜ், பிரதேச செயலக உதவி திட்டமிடல்  பணிப்பாளர் திரு. செ பிரபாகரன், பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி குழு தலைவர்கள், மகிழூர் கிராம சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும்  கலந்து  கொண்டிருந்தனர். 

💥 மேலும்  நிகழ்வின் இறுதியில் மண்டபத்தடி வலம்புரி பிள்ளையார் ஆலய வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

News & Events

14
ஜூன்2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
ஜூன்2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
மே2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
நவ2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

குடியுரிமை சாசனம்

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி,  காரத்திகை, ...

29
ஜூன்2022

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில்...

07
ஏப்2022
"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

 நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை...

28
மார்2022
சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும்...

Scroll To Top