
2019ம் ஆண்டு அரச புதிய கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்கும் விசேட நிகழ்வு 01.01.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வின் போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்கள், அரச பணியாளர்களுக்கென இருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காரியாலய அரச சேவையாளர்கள்சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்று பிரதேச செயலாளரின் புத்தாண்டுச் செய்தி உரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சிவலிங்கம் சத்தியகௌரி மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.





