
எமது பிரதேச செயலகத்திற்கு வரும் அனைவரினதும் கவனத்திற்கு !!!
தற்போது நாட்டில் நிலவும் Covid -19 தொற்றுக் காரணமாக அதிலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு ICTA யினால் வடிவமைக்கப்பட்ட QR Code Tracer மூலம் உங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
QR Code விபரங்கள் அடங்கிய விளம்பரம் எமது பிரதேச செயலகத்தின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

1. பதிவு செய்து கொள்வதற்கு உங்கள் தொலைபேசியில் QR code scanner செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

2. பதிவிறக்கம் செய்த பின்பு அந்த செயலி மூலம் QR code ஐ scan செய்யவும்.

3. scan செய்த பின்பு வரும் link ஐ click செய்து உங்கள் Page இனை Open செய்யவும்.

4. பின்னர் வரும் திரையில் Mobile Number மற்றும் NIC Number என்பவற்றை உரிய கட்டத்திற்குள் உள்ளீடு செய்து Register பண்ணவும்.

5. பின்னர் உமது mobile ற்கு SMS மூலம் வரும் Security Code இனை உள்ளிட்டு vertify செய்யவும்.

6. vertify செய்தவுடன் தங்களுக்கு இவ்வாறான தகவல் கிடைக்கப்பெறும்.

7. இதே நடைமுறையினை அலுவலகத்தை விட்டு வெளிச் செல்லும் போதும் செய்யவும் செய்தவுடன் தங்களுக்கு இவ்வாறான தகவல் கிடைக்கப்பெறும்.

எனவே எமது பிரதேச செயலகத்திற்கு வரும் அனைவரும் இவ் நடைமுறையினை தினமும் அலுவலகத்திற்கு உள் வரும் போதும் வெளிச் செல்லும் போதும் செய்து எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தகவல் -:
பிரதேச செயலாளர்,
மண்முனை தென் எருவில் பற்று,
களுவாஞ்சிகுடி.



