Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

Home News & Events பிரதேச விளையாட்டு விழா - 2015.05.12

பிரதேச விளையாட்டு விழா - 2015.05.12

பிரதேச விளையாட்டு விழா - 2015.05.12

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா சென்ற 2015.05.12ம் திகதி செவ்வாய்க் கிழமை பிற்பகல் 2.00 மணிளயவில் பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்களின் தலைமையில் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திரு பு.ரூபராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் மூலமும் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவின் அதிதிகளாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தட்சகர் திரு கு.சுகுணன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி வை.வசந்தகுமாரன் உட்பட பிரதேச செயலக, ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்களின் ஆதரவுடனும் சிறப்பாக இடம்பெற்றன.  இவ்விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் ஆண்கள் பிரிவில் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தினை செட்டிபாளையம் நியுட்டன் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டதுடன் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் செட்டிபாளையம் நியுட்டன் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தினையும் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன. இவ்விளையாட்டு விழாவில் குழுப்போட்டிகள் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் சமபுள்ளிகளைப் பெற்று களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகமும், செட்டிபாளையம் நியுட்டன் விளையாட்டுக் கழகமும் இணைச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

 

 


Last Updated (Wednesday, 13 May 2015 06:49)